தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலிலும், சமூக நலனில் ஈடுபாடுடைய பல்வேறு நல வாரியங்களின் ஒத்துழைப்பிலும், அமைப்புசார் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதே எங்களின் முக்கிய நோக்கமாகும். 

மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தும் 18 வகையான தொழிலாளர் நல வாரியங்கள் மூலம், பல்வேறு துறைகளில் கடுமையாக உழைக்கும் அமைப்பு சார தொழிலாளர்களுக்கான நலத்திட்ட உதவிகளை அவர்கள் அறிந்து பயன்பெறவும், ஒழுங்காக பதிவு செய்து தொடர்ந்தும் நலன் பெறவும் உறுதியாக வழிகாட்டும் சேவையை வழங்குகிறோம். 

18 வாரியங்களுக்கும் நலவாரியங்களுக்கும் பதிவு / புதுபித்தல் மற்றும் நலத்திட்ட உதவிகளுக்கு கட்டணச் சேவை வழங்கப்படும்.

ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் சேவைகள் மூலம் எளிதான அணுகல்.

நாங்கள் இணைந்து பணியாற்றும் 18 நல வாரியங்கள் :

1.தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம்.

2. தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் நல வாரியம்.

3. தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் நல வாரியம்.

4. தமிழ்நாடு சலவைத் தொழிலாளர்கள் நல வாரியம்.

5. தமிழ்நாடு முடித்திருத்துவோர் நல வாரியம்.

6. தமிழ்நாடு தையல் தொழிலாளர்கள் நல வாரியம்.

7. தமிழ்நாடு கைவினைத் தொழிலாளர்கள் நல வாரியம்.

8. தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியம்.

9. தமிழ்நாடு கைத்தறி மற்றும் கைத்தறிப்பட்டு நெய்யும் தொழிலாளர்கள் நல வாரியம்.

10. காலணி, தோல் பொருட்கள் உற்பத்தி மற்றும் தோல் பதனிடும் தொழிலாளர்கள் நல வாரியம்.

11. தமிழ்நாடு ஓவியர் நல வாரியம்.

12. தமிழ்நாடு பொற்கொல்லர் நல வாரியம்.

13. தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளர்கள் நல வாரியம்.

14. தமிழ்நாடு வீட்டுப்பணியாளர்கள் நல வாரியம்.

15. தமிழ்நாடு விசைத்தறி நெசவாளர்கள் நல வாரியம்.

16. தமிழ்நாடு பாதையோர வணிகர்கள் மற்றும் கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் நல வாரியம்.

17. தமிழ்நாடு சமையல் தொழிலாளர்கள் நல வாரியம்.

18. TN Fire and Match Workers Welfare Board / Tamil Nadu Fire and Match Workers Welfare Board.

மேலும் விபரங்களுக்கு எங்களை தொடர்பு கொள்ளவும்.